நகைகளை கொள்ளையடிப்பதற்காகவே கொலை செய்தோம்! கைது செய்யப்பட்ட வீட்டு பணிப்பெண் வாக்குமூலம்.. |

வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை அவர் அணிந்திருந்த நகைகளுக்காகவே. என கைதான நபர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு – பார் வீதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

எஜமானி அணிந்திருந்த தங்க நகைகளை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் எஜமானியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன்.

என சம்பவம் தொடர்பில் கைதான குறித்த வீட்டின் பணிப்பெண் குறிப்பிட்டுள்ளார். பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவகையில் கைதான இருவரையும் எதிர்வரும் ஜனவரி 04 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு

மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் நேற்று (21) உத்தரவிட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தின் பின்னர்,

குறித்த பணி பெண்ணினால் 46 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin