150 பேரை உலகுக்கு வழங்கிய யாழ்.சாவகச்சோியை சேர்ந்த 105 வயது மூதாட்டி இறந்தார்..! |

நான்கு தலைமுறைகளை இந்த உலகத்திற்கு தந்த சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த 105 வயதுவரை வாழ்ந்த லட்சுமி தம்பிப்பிள்ளை 21/12/2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இவருக்கு 10 பிள்ளைகள் (5 ஆண் பிள்ளைகளும் 5 பெண் பிள்ளைகளும் ) பேரப் பிள்ளைகள் 45 மூன்றாம் தலைமுறையான பூட்டப் பிள்ளைகள் 83 நான்காம் தலைமுறையாக 12 கொப்பாட்டன் பிள்ளைகளுமாக

மொத்தம் 150 பேரை இந்த உலகத்திற்கு வழங்கியுள்ளார். பத்து பிள்ளைகளில் 5 ஆண்கள் இலங்கையிலும் மூன்று மகள்கள் நோர்வே, சுவிஸ், ஜேர்மனியிலும் ஒரு மகள் இலங்கை சாவகச்சேரியிலும் வசிக்கின்றனர்.

ஒரு மகள் காலமாகியுள்ளார். இவர் 10/5/1916 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவரது கணவர் 1901 ஆம் ஆண்டு பிறந்து 1990 ஆம் ஆண்டு 90 வயதில் காலமானார். இவர் தனது கணவருடன் சேர்ந்து விவசாயத்தை செய்து வந்துள்ளார்.

சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கம் உடையவர். இதுவரை எந்தவிதமான நோய் நொடிகளுமின்றி சுகதேகியாக வாழ்ந்துள்ளார். இவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சை பிரிவிற்கு  நிதி உதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin