திருக்கோவில் பகுதியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு.

அம்பாறை  – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறிய சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது.

திருக்கோவில் பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

விநாயகபுரம் 4ம் பிரிவு கடற்கரை வீதியிலுள்ள வீடொன்றில் சம்பவ தினமான நேற்று எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென  அடிப்பு வெடித்து சிதறியுள்ளது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் எதுவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery Gallery

Recommended For You

About the Author: admin