பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்து மூன்று மாணவர்கள் பலி! சோகத்தில் உறவினர்கள்.

தமிழகத்தின் திருவெல்வேலி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நெல்லை நகர்ப் பகுதியிலுள்ள பொருள்காட்சித் திடல் அருகேவுள்ள டவுன் சாஃப்டர் மேல்நிலைப்பாடசாலையின் கழிவறைச் சுவர் வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்துள்ளது.

இந்த இடிபாடுகளில் சிக்கி விஸ்வ ரஞ்சன் (வகுப்பு 8ஏ), அன்பழகன் (வகுப்பு 9பி) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதிஷ்(வகுப்பு 6சி) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

100 வருடம் பழைமை வாய்ந்த பாடசாலையின் கட்டடமே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.

இதற்கிடையே, மாணவர்கள் உயிரிழந்ததை அறிந்த சக மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் உள்ள பொருட்களை கோபத்தில் சேதப்படுத்தியுள்ளதுடன்,பாடசாலை வளாகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பிற்காக பொலிஸாஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin