இழுவை மடி தடை சட்டத்தை மீளாய்வு செய்ய முடிவு……!அமைச்சர் டக்ளஸ்.

2017ம் ஆண்டு சட்டத்தை மீளாய்வு செய்து நாராவின் அறிக்கையுடன் இரண்டு மூன்று மாதங்களிற்குள் உள்ளுர் இழுவைப்படகு மீன்பிடி முறைக்கு முடிவு செய்யலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் உள்ளுர் இழுவை படகு மீன்பிடி முறை சட்டம் தொடர்பில் குறிப்பிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2017ம் ஆண்டு இழுவைப்படகிற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாது கிடப்பில் போடுமாறு கடல் தொழில் திணைக்களத்திற்கு கூறப்பட்டள்ளது. அதனால் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதனால் அன்றைய ஆட்சியிலேயே அது நடந்துள்ளது.
தற்பொழுது அந்த பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. இது தொடர்பில் நாரா நிறுவனத்திடம் ஆய்வு ஒன்று கேட்டுள்ளோம். ஏற்கனவே கடந்த ஆட்சியில் நாரா நிறுவனத்தினால் பல இடங்கள் அடையாளம் காட்டப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அங்கு தற்காலிகமாக தொழில் செய்வதற்கு நிலங்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமையில் 2017ம் ஆண்டு சட்டத்தை மீளாய்வு செய்து நாராவின் அறிக்கையையும் பெற்று இரண்டு மூன்று மாதங்களிற்குள் அதற்கு ஒரு முடிவுக்கு வரலாம் என்று நினைக்கின்றேன்.
2017ம் ஆண்டு சட்டம் கொண்டுவந்து தரப்படும்போதே விஞ்ஞான ரீதியாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் விசை குறைந்த மற்றும் அளவில் மட்டுப்பட்டுத்தப்பட்ட படகுகள் பயன்பாடு தொடர்பில் பாராளுமன்றத்தில்தான் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
ஆனால் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த முறையில் தொழிலினை செய்யலாம். மிக அடிமட்டம்வரை புாகாத வகையில் தொழிலை செய்தால் அடிமட்டத்தில் பாதிப்புக்கள் இல்லை. அதற்கு முறையான விடயங்களை கையாண்டால் மேற்கொள்ள முடியும்.
அதற்கான அனுமதி வழங்கப்படாதவிடத்து அது சட்டவிரோத தொழிலாகவே அமையும். அதனை செய்ய முடியுமாக இருந்தால் விரைவுபடுத்த வேண்டும். இல்லையேல் அது சட்டவிரோதமனதாகவே இருக்கும்.
இதேவேளை உள்ளுர் இழுவைப்படுகுகளினாலேயே இங்குள்ள மீனவர்கள் தற்பொழுது பாதிக்கப்படுகின்றார்கள். மீனவர்களின் வரைகளை அழித்தல் உள்ளிட்ட வேலைகளை அவர்கள் செய்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews