இழுவை படகுகளை விரைந்து அகற்ற நடவடிக்கை……!டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சி கிராஞ்சி கடல் பரப்பில் 14 இந்திய இழுவை படகுகள் தரித்து விடப்பட்டுள்ள நிலையில் அவற்றை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்திய இழுவைப்படகு விடயம் தொடர்பில் ஆராயப்பட்டபொழுதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தரித்துள்ள இந்திய இழுவை படகுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டம். அதனால் சுற்று சூழல் பாததிப்பு ஏற்படுகின்றது. அதலி இருந்து வெளியேறும் எண்ணை படலங்களால் சூழல் மாசு படுகின்றது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கடல் தொழில் அமைச்சர் அதிகாரிகளிடம் வினவினார்.
கிளிநொச்சி நீதிமன்றில் இரண்டு வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இரண்டு படகுகள் தொடர்பான உரிமை கோரலுக்கு அடுத்த நீதிமன்ற விசாரணைக்கு சம்மந்தப்பட்டவர்கள் சமூகமளிக்க வேண்டும் என தெரிவித்தார். ஏனைய படகுகள் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தமை என்பதாலும், அவை கடற்படையினர் வசம் உள்ளமையாலும் அவை தொடர்பான தகவல்கள் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
தமது கட்டுப்பாட்டில் 14 படகுகள் காணப்படுவதாகவும், அவற்றை அகற்றுவதற்கு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த படகுகளை விற்று நிதியை தமக்கு தருமாறு இந்திய தூதுவர் சந்திப்புக்களில் தன்னை கோருவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார். அவற்றை இரும்புக்காக விற்பது அல்லது செயற்கை பாறைகளை உருவாக்கும் வகையில் கடலிற்குள் போடுவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என அவமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews