காணிகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அமைச்சர்கள் வந்து வழங்க சொன்னாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என எம் ஏ மந்திரன்…!

காணிகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அமைச்சர்கள் வந்து வழங்க சொன்னாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என எம் ஏ மந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வனலாகாண திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் காணிகளை சவீகரிக்கம் விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
காணிகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அமைச்சர்கள் வந்து வழங்க சொன்னாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஐந்தாறு வருடங்களாக செய்யாது இருக்கின்றார்கள். அண்மையில் வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பிலான  பிரச்சினையை தீர்க்கக்டிய வகையில்  வடமாகாண ரீதியில் கூட்டத்தை ஏற்பாடு செய்து தீர்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தேன்.
ஏனேனில் குறித்த நிகழ்ச்சி நிரலில் நாடுமுழுவது இது நடைபெறுகின்றது. இடம்பெயர்வுகள் கூடுதலாக இருந்தமையால் மக்கள் நீண்ட காலமாக காணிகளை பராமரிக்க முடியாது போனமையால் இங்குள்ள பிரதேசங்களில் கூடுதலாக நடைபெறுகின்றது.
அதனை வெகு இலகுவாக அவர்கள் செய்கின்றார்கள். ஆனால் அதனை மாற்றியமைப்பதற்கு கஸ்டப்படுகின்றார்கள் என தெரிவித்தார்.
இந்தமுறை இது சரிவரும் என நம்புவதாகவும், ஏனெனில் ஜனாதிபதியினுடைய விசேட ஆலோசனைக்கு கீழாக அது விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews