பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரு ரவுடிகள் கைது! மேலும் இருவரை தேடும் பொலிஸ், வாள் மீட்பு.. |

யாழ்.திருநெல்வேலி – பரமேஸ்வரா சந்தியில் நேற்றுமுன்தினம்  இளைஞர் ஒருவர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். விசாரணையின் அடிப்படையில் முன்பகை காரணமாகவே குறித்த வாள்வெட்டு வன்முறை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

வண்ணார்பண்ணையைச் சேர்ந்த நால்வரே குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. சந்தேக நபர்களில் இருவர் அவர்களின் வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாள்வெட்டுக்குப் பயன்படுத்தப்பட்டது என நம்பப்படும் வாள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏனைய இருவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews