லைற்றர் வெடித்து மீசை கருகியது..! யாழ்.சாவகச்சோியில் இரு சம்பவங்கள் பதிவு.. |

யாழ்.சாவகச்சோியில் லைற்றர் மூலம் சிகரெட்டை பற்றவைத்தபோது லைற்றர் வெடித்ததில் தீப்பற்றி மீசை கருகிய சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. 

சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது , லைட்டர் வெடித்துள்ளது.

அதனால் , அவரது மீசை தீயில் கருகியது. இருந்த போதிலும் பெரியளவிலான அனர்த்தம் ஏற்படவில்லை. அதேவேளை நேற்று மாலை சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு அருகில் முதியவர் ஒருவர்  லைட்டர் மூலம் சுருட்டை பற்ற வைக்க முனைந்த போதிலும் , லைட்டர் வெடித்துள்ளது. நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடிப்புக்கள் வெடிப்பு சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ள நிலையில்,

தற்போது சாவகச்சேரியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews