திருமலை நாகம்மாள் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்துக்கு 5லட்சம் பெறுமதியான இயந்திர உதவி வழங்கி வைப்பு.

(திருமலை நிருபர்)

திருமலை வீரமாநகரில் சேதனப் பசளை உற்பத்திச் செயற்பாட்டில் ஈடுபடும் நாகம்மாள் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்துக்கான இயந்திர உபகரணங்களின் தேவை தொடர்பில் நாகம்மாள் விவசாய சம்மேளனத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மூதூர் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய நாகம்மாள் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட நாகம்மாள் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்துக்கு ரூபா ஐந்து இலட்சம் பெறுமதியான சேதனப்பசளை உற்பத்தி செய்யும் இயந்திரமும் அதற்குத் தேவையான உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் மேற்படி உபகரணங்களை நாகம்மாள் விவசாய சம்மேளனம் மற்றும் நாகம்மாள் இயற்கைப் பசளை உற்பத்தி நிலையம் போன்றவற்றின் தலைவருமான சித்திரவேல் கணேஸ் அவர்களிடம் கையளித்திருந்தார்.

மேற்படி உபகரணங்களைப் பெற்றுக் கொள்ள உறுதுணையாக இருந்த தோப்பூர் கமநல சேவை நிலைய அதிகாரிகள் மூதூர் பிரதேச செயலகத்தின் கமநல உத்தியோகத்தர் பிரதேச செயலாளர் மாவட்டச் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு நாகம்மாள் விவசாய சம்மேளனம் நாகம்மாள் இயற்கைப்பசளை உற்பத்தி நிலையம் மற்றும் பிரதேச மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews