24 மணித்தியாலங்களில் 20 வெடிப்பு சம்பவங்கள், அச்சுறுத்தும் எரிவாயு சிலிண்டர்கள், விசாரணை குழு அமைத்தார் ஜனாதிபதி.. |

நாட்டில் நேற்று மாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் சமையல் எரிவாயு தீ பிடிக்கும் சம்பவங்கள் 20 பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற சம்பவங்கள் மாத்தறை – நாவிமன, மீகொட, அத்துருகிரிய, மீரிகம, அம்பலாங்கொட, கடவத்தை, தியத்தலாவ, கொள்ளுப்பிட்டி, களுத்துறை, கெக்கிராவ, பத்தனை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, சமையல் எரிவாயுடன் தொடர்புடைய தீப்பரவல்கள் அல்லது வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் அதுகுறித்த தீர்வினை வழங்குவதற்கும் ஜனாதிபதி  விசேட குழுவொன்று நியமித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews