வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஆயுதம் தாங்கியவர்கள் நடந்து கொண்ட விதத்தால் நாட்டுக்கு அபகீர்த்தி.. | சஜித்.

மாவீரர் நாளில் வடமாகாணத்தில் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களை கண்டிப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுயைில், ஜனநாயக நாடு எனில் போரில் இறந்தவர்களை அமைதியான முறையில் நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு உரித்துண்டு.

அதை ஆயுதமுனையில் அடக்க முயல்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் ஆயுதப் படைகள் நடந்துகொண்ட விதம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் இராணுவ ஆட்சிக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews