யாழ்.மாதகலில் மக்களின் காணியை கடற்படையின் தேவைக்க சுவீகரிக்க இன்று அளவீடு! தடுத்து நிறுத்த அனைவருக்கும் அழைப்பு.

யாழ்.மாதகலில் பொதுமக்களுக்கு சொந்தமான 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பிற்கான அளவீடு செய்யும் பணி இன்று நடைபெறவுள்ளது.

மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை 09 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை மாதகல் மேற்கில் 16 ஏக்கர் காணி அளவீட்டு பணிகள் காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த காணி அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக  குறித்த காணிகளுக்கு முன்பாக காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள்,

அப்பகுதி மக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனவும் , தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு

அனைத்து தரப்பினரிடமும் காணி உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews