கஜேந்திரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு சிங்கள எம்.பிக்கள் வலியுறுத்து!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, நாடாளுமன்றத்தில் நேற்று ‘எமது தேசியத் தலைவர்’ என்று விளித்தமைக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பிக்கு சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் அவரின் உரையை நாடாளுமன்றப் பதிவேடான ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பெரும்பான்மை இன உறுப்பினர்கள் சபையில் வலியுறுத்தினர்.

எனினும், சபைக்குத் தலைமை தாங்கிய எம்.வேலுகுமார் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கின்ற கருத்துரிமையை இல்லாது செய்ய முடியாது என்றும், இந்த விடயத்தை சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும் கூறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews