வல்வெட்டித்துறை தீருவிலில் மாவீரர் நாள் நினைவேந்தல்..! அரசியல் தலைவர்கள் முன்னே வாருங்கள், சிவாஜிலிங்கம் அழைப்பு.. |

மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவுகூரல்களை நடாத்துவது நமது கடமை, அதற்கு அரசியல்வாதிகள் முன்னால் நின்ற செயற்படுவதற்குத் தயாராக இருக்கவேண்டும். என தமிழ்தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

மாவீரர் நாளை அனுஷ்டிப்பது தொடர்பாக இலங்கை அரசு பொலிசார் மூலமும் படையினர் மூலமும் நீதிமன்றங்களை அணுகி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில் பின்னணியிலேயே தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூற முற்படுகின்றார் எனக் கூறி எங்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள்.

சில நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து இருக்கின்றன. மாவீரர் நினைவு தினங்கள் இடம்பெறும் துயிலுமில்லங்கள் தற்போது இராணுவ முற்றுகைக்குள் காணப்படுகின்றது.

தீருவில் பொதுப் பூங்காவில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியை வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவரிடம் கேட்டிருக்கின்றோம். அந்த அனுமதி கிடைத்தவுடன் சுகாதாரத் துறையின் அனுமதியுடன்

நவம்பர் 27ம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். குறிப்பாக அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும்

இதில் மௌனமாக இருக்காது துணிந்து பொது இடங்களிலும் ஆலயங்களிலும் அஞ்சலியை செய்ய முன்வர வேண்டும்.தடை செய்யப்பட்ட பொருட்களை வைக்காமல் மாவீரர்களின் நினைவேந்தல் செய்வதை யாரும் தடுக்க முடியாது.

நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews