திருமலை,குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகுப்பாதை கவிழ்ந்து விபத்து.

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிய படகு கவிழ்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews