ஆளுநரின் பொது உறவுகள் தொடர்பான இணைப்பாளராக ஓய்வுபெற்ற வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் நியமனம்.. |

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பொது உறவுகள் தொடர்பான இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் நியமிக்கப்பட்டிருக்கின்றார். 

வடமாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய அவர், வட மாகாணத்தில் பொதுமக்களுடன் நெருங்கிய உறவினை கொண்டுள்ள நிலையிலும், மக்களின் பிரச்சினைகளை மிக நன்கு அறிந்துள்ள நிலையிலும்

இவ்வாறு ஆளுநரின் பொது மக்கள் உறவுகள் தொடர்பிலான் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஆளுநர் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் குற்றத் தடுப்புப் பிரிவு, போக்குவரத்து தலைமையகம் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய பிரிவுகளின் பனிப்பாளராக கடமையாற்றிய அனுபவமிக்க ரி.கணேசநாதன்,

இறுதியாக வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews