பாவனையில் உள்ள வீதியில் குப்பை கொட்டிய குப்பையர், வசமாக காட்டினார்….!

யாழ்.தொல்புரம் பகுதியில் பொதுமக்கள் பாவனையில் உள்ள வீதியில் குப்பைகளை வீசிக் கொண்டு சென்றவர் சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கியதால் கொட்டிய குப்பைகளை அவரே அள்ளிச் சென்றிருக்கின்றார். 

உழவு இயந்திரத்தில் தன்னுடைய வீட்டு குப்பைகளை ஏற்றிவந்த குறித்த நபர் மக்கள் பாவனையில் உள்ள வீதிகளில் பொறுப்பற்ற விதமாக வீசிவிட்டு சென்றிருக்கின்றார்.

இது தொடர்பாக ஆராய்ந்த பிரதேசசபை உறுப்பினர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராக்களை ஆராய்ந்துள்ளார். 

இதன்போது வேண்டுமென்றே குப்பைகளை வீசி சென்றமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனை ஆதாரமாக கொண்டுவட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. 

முறைப்பாட்டின் அடிப்படையில் குப்பைகளை வீசி சென்ற நபரை அடையாளம் கண்ட பொலிஸார் அந்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்ததுடன் பொறுப்பதிகாரி சம்மன் குணதிலக்க அவரை கண்டித்துள்ளார்.

மேலும் கொட்டிய குப்பைகளை அகற்றவேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து குப்பையை வீசிய நபரும், குப்பைக்கு சொந்தக்காரரான கடை உரிமையாளர் ஒருவரும் பொதுமக்கள் முன்னிலையில் குப்பைகளை அள்ளி அகற்றினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews