வடக்கில் மீளவும் விறகு வியாபாரம் சூடு பிடித்துள்ளது! எரிபொருள் விலையேற்றத்தால் பழமையை விரும்பும் மக்கள்.. |

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையேற்றம் போன்றவற்றினால் வடமாகாணத்தில் உள்ள மக்கள் விறகு பாவனைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

கடந்த காலங்களில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் விறகு வைத்து வைத்து வீடு வீடாக விற்பனை செய்பவர்களுக்கு ஒரு கட்டு விறகு விற்பது மிகவும் சிரமமாக இருந்த நிலையில்,

தற்போது சைக்கிளில் கட்டி கொண்டுவந்து விற்கும் ஒருகட்டு விறகு 1800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மற்றும் மோட்டார் சைக்கிளில் கொண்டுவரப்பட்டு விற்கும் ஒருகட்டு விறகு 2500. ரூபாவிற்கும் விற்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews