வண்ணாங்கேணி வடக்கில் 30 குடும்பங்களுக்கும் மேல் தனியார் ஒருவரால் பாதிப்பு.

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் அடை மழை காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தில் மழைக் காலங்களில்  கிராமத்தின் பின்புறத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெள்ள நீர் கிராமத்திற்குள் வந்து பின் அதே கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவரின் காணி ஒன்றின் வாய்க்கால் ஊடாக வெள்ள நீர் வெளியேறி வந்துள்ளது. தற்பொழுது குறித்த காணி உரிமையாளர் வெள்ள நீர் வெளியேறுவதை தடுத்து அணைகட்டியுள்ளார்.
இதனால் குறித்த கிராமத்தில் 30ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களும் உள்ளடங்களாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக கிராம மக்கள் இன்று (13) காலை பளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று நிலைப்பாட்டை கூறியுள்ளனர் இருப்பினும் பொலிசாரால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை எனவும் சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தாம் வெள்ளநீரினால் நோய் வாய்பட வாய்ப்புள்ளதாகவும்,விசேட தேவைக்குட்பட்டவர்கள் , முதியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்ட வெள்ள நீரானது குளத்திற்கு செல்ல வேறு எந்தவொறு வழியும் இல்லாதமையால் குறித்த விடயம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை எடுத்து தருமாறு உரிய அதிகாரிகளை கேட்டு நிற்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews