ஊஞ்சல் கயிறு இறுகியதில் 13 வயது சிறுமி மரணம்.

நுவரெலியா மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியில், ஊஞ்சல் கயிறு இறுகியதில் 13 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழிந்துள்ளார் என்று நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது வீட்டில் சேலையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிற்றில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, கழுத்து இறுகி சிறுமி மரணமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நல்லதண்ணி பொலிஸார், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுமியின் சடலம் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று அவரது சடலம் தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுமியின் மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews