வடக்கில் விரைவில் சமூக காவல் குழு ஆரம்பிக்கப்படும்!வடக்கு ஆளுநர்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில், பிரஜா காவற்துறையினர் வடமாகாணத்தில் வேலையற்ற இளைஞர்களை வழிநடாத்தும் வகையில் விசேட நிகழ்ச்சி தொடர்களை தயாரித்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் இளம் குற்றவாளிகளின் குற்றங்களை நிறுத்துவதற்கான வழிகாட்டுதல்.

சமூக காவல் குழுக்கள் என்ற கருத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயற்படுத்தப்படும்.

இதற்காக வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களை தெரிவு செய்து அவர்களின் விசேட திறமைகளை இனங்கண்டு வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதேஇவ் வேலைத்திட்டமாகும்.

இந்த அணிகளை தெரிவு செய்யுமாறு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதேச உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews