வயிற்றினுள் மறைத்து கொக்கேய்ன் கடத்தி வந்த கென்யா பிரஜை கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய வளாகத்திலிருந்து கொக்கேய்னுடன் வெளியேற முயன்ற கென்யாப் பிரஜை ஒருவரை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே. 650 என்ற விமானத்தில் இலங்கை வந்த குறித்த நபரிடமிருந்து பெருந்தொகையான கொக்கேய்ன் அடங்கிய வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை விமான நிலைய வளாகத்தில் உள்ள உடல் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் சோதனையிட்டபோது, அவரது வயிற்றினுள் சந்தேகத்துக்கிடமான பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 39 வயதான கென்யாப் பிரஜை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews