யாழில் வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டார் மாவட்ட அரச அதிபர்.

யாழ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேரடியாக இன்றையதினம் பார்வையிட்டார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள  தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும்
நிலையிலேயே பலபகுதிகள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லுண்டாய், நாவாந்துறை,அச்சுவேலி போன்ற பகுதிகளிற்கு விஜயம் செய்த அரசாங்க
அதிபர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews