கிளிநொச்சி புதுமுறிப்பு குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய குளங்களில் இரால் குஞ்சுகள் விடுவிப்பு.

கிளிநொச்சி புதுமுறிப்பு குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய குளங்களில் இரால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் நிதி பங்களிப்புடனும், மெசிடோ நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் குறித்த இரால் குஞசுகள் இன்று குளங்களில் விடுவிக்கப்பட்டன.
புதுமுறிப்பு குளத்தில் ஒரு லட்சத்து 75000 இறால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மகாண சபையின் நிதி பங்களிப்பில் 75000 குஞ்சுகளும்,,மெசிடோ நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் ஒருலட்சம் இறால் குஞசுகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது,
இதேவேளை அக்கராயன்குளத்தில் 2 லட்சம் இறால் குங்சுகள் விடப்பட்டுள்ளது. வடக்கு மகாண சபையின் நிதி பங்களிப்பில் ஒரு லட்சம் குஞ்சுகளும்,,மெசிடோ நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் ஒருலட்சம் இறால் குஞசுகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன், யாழ்ப்பாணம்,கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபை உத்தியோகத்தர் கு.சங்கீதன், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் யாட்சன் விகிராடோ, நன்னீர் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விடுவிக்கப்பட்ட இரால்குஞசுகள் 6 தொடக்கம் 8 மாதங்களில் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இரால் சந்தையில் பெரும் கிராக்கி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews