கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கல்விச் சேவையை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு.

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் தற்போதய கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருமான நகுலேஸ்வரி புள்ளநாயகத்தின் கல்விச் சேவையினை பாராட்டி திருக்கோவில் வலயக் கல்வி அதிகாரியால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வு திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரனின் தலைமையில் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

கௌரவிப்பு விழாவில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி நலகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணிக்கு திருக்கோவில் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு இருந்ததுடன் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் அம்மணியின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு இருந்த நிலைபேரான கல்வி மற்றும் நிருவாக ரீதியான அபிவிருத்திகள் தொடர்பாக நன்றிகள் தெரிவித்து விசேட உரைகளும் இடம்பெற்று இருந்தன.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகத்திற்கு திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வி அதிகாரிகளால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டதுடன் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்று இருந்தன.

Recommended For You

About the Author: Editor Elukainews