இன்று இந்த அரசாங்கமானது, நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளியுள்ளது- மரிக்கார் எம்.பி.

இன்று இந்த அரசாங்கமானது, நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளியுள்ளதுடன் வரிசையில் நிக்கும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (28) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சீர்குழைந்துள்ளன.

விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்றுமதி முற்றுமுழுதாக ஒழிந்துள்ளது.

சோம்பியா போன்று எமது நாட்டையும் மாற்றியுள்ள இந்த அரசாங்கம், தற்போது விவசாயிகள் விவசாய செய்கையை மேற்கொள்ள முடியாதளவு நாட்டை நாசமாக்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews