இந்திய தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு, யாழ் இந்திய துணை தூதரகத்தினால் மிதிவண்டி ஓட்ட நிகழ்வு!

யாழ். இந்திய துணைத் தூதரகமானது, சர்தார் வல்லபாய் படேலின் 146 வது பிறந்தநாள், மற்றும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு  “ஆசாதிகா அம்ரித்ம ஹோற்சவ்” கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று “ஒற்றுமைக்கான  மிதிவண்டி” ஓட்ட நிகழ்வொன்றை நடத்தியது

.


இதன்போது யாழ் இந்தியத துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் , தூதரகத்திலிருந்து மிதிவண்டியில் பயணித்து நாவற்குழி பகுதியில் சிவபூமி அறக்கட்டளையின் கீழ் அமைந்துள்ள சிவபூமி (தட்சணாமூர்த்தி) கோவிலை அடைந்தனர்.
அங்கு சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொட்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜை வரவேற்றார்.
தொடர்ந்து “உலகம் ஒரு குடும்பம் எனும் வசுதைவ குடும்பகத்தின்” வழிகாட்டுதலின் பேரில், இந்திய துணைத் தூதுவர் துணைத் தூதரகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து இந்திய மற்றும் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக சிறப்பு வழிபாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews

Leave a Reply