சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு..! 19 பேருக்கு கொரோனா தொற்று.. |

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

குருநாகல் – குளியாப்பிட்டி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 35 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தத் தகவலை குளியாப்பிட்டி பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டி, கரகஹகெதர பிரதேசத்திலுள்ள மண்டபமொன்றில் இந்தத் திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போதே 19 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று முற்றாக நீங்கிவிட்டது என்று நினைத்து மக்கள் செயற்படுவதால் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது எனக் குளியாப்பிட்டி

பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி உத்பல சங்கப்ப தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews