பொது போக்குவரத்து தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியவுடன் போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்க போக்குவரத்து அமைச்சு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து சுகாதார அதிகாரிகள் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சுகாதார ஆணையத்தின் ஆலோசனையைத் தவிர்த்து ரயில் சேவைகள் இயங்காது. இருப்பினும், அக்டோபர் 21ம் திகதி நாட்டை மீண்டும் திறந்தவுடன் சிறப்பு பேருந்து சேவையின் கீழ் பல பேருந்துகள் இயக்கப்படும்” என்றார்.

“பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த காலங்களில் ரயில்கள் மற்றும் பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டன. 200 க்கும் மேற்பட்ட பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டன.

நாங்கள் சொன்னபடி போக்குவரத்து சேவைகளை இயக்க தயாராக இருக்கிறோம், ஆனால் சேவையை இயல்பாக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும்,

எனினும், அக்டோபர் 21ம் திகதி எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அக்டோபர் 25 முதல் சேவைகளை மீண்டும் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews