மீண்டும் ஆபத்தான நிலைமையில் இலங்கை – சுகாதார பிரிவு கடும் எச்சரிக்கை

நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்டால் எதிர்வரும் நாட்களில் மீண்டும் அவதானமிக்க நிலைமை ஏற்பட கூடும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணக்கட்டுப்பாடு குறித்து கண்டுக்கொள்ளாமல் கடந்த வார இறுதியில் பல மக்கள் பல்வேறு பிரதேசங்களுக்கு சென்றதனை அவதானிக்க முடிந்ததாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய நிலைமைக்கு மத்தியில் நாட்டு மக்கள் மேலும் சில மாதங்களுக்கு அவதானமாக செயற்பட வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியாவில் பாரிய அளவு சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னரும் சுற்றுலா பயணங்கள் மேற்கொண்டமையினாலேயே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்தோம். மீண்டும் ஆபத்தான நிலைமைக்கு நாடு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

தயவு செய்து மேலும் சில நாட்கள் பொறுமையாக இருக்குமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews