செயற்கை உரத்தை  இறக்குமதி செய்யக் கோரி விவசாயிகள் போராட்டத்தில்….

செயற்கை உரத்தை  இறக்குமதி செய்யக் கோரி இன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இன்று காலை 09:45 மணியளவில் அம்பன் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகளால்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
விவசாயிகளுக்கான செயற்கை உரத்தின் அரசாங்கம் திடீரென நிறுத்தியதன் காரணமாக தம்மால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் உள்ளதாகவும்,  எனவே அரசாங்கம் இம்முறை செயற்கை உரத்த இறக்குமதி செய்து வழங்க வேண்டுமென்றும்,  செயற்கை உரத்தை தடை  செய்யப்பட வேண்டுமாக இருந்தால் கால அவகாசம் வழங்கப்பட்டு அதனை  தடை செய்திருக்க  வேண்டும் என்றும்,  தற்போது யாழ்ப்பாணத்தில் இயற்கை உரமான மாட்டெருவுக்கு கூட  தட்டுப்பாடு நிலவுவதாகவும்,  இதனால் தாம்  பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், தற்போது  நெற்செய்கை மேற்கொண்டும் உரம்  இல்லாத நிலையில் தமது நெற்பயிர் பெரிதும் பாதிக்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அதே வேளை  அரசாங்கம் எதிர்காலத்தில் விவாசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கவனம் செலுத்தி தற்காலிகமாகவேனும் செயற்கை உரத்தை இறக்குமதி செய்து வழங்க வேண்டும் என்றும், இயற்கை உரம் கூட விவசாய நிலையங்களில் இல்லை என்றும் தெரிவித்தனர்
வடமராட்சி

Recommended For You

About the Author: Editor Elukainews