
*_꧁. மார்கழி: 𝟮𝟲
꧂_*
*_ வெள்ளிக்கிழமை_
*
*_ 𝟬𝟵•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் காணப்படும். பொன், பொருட்ச்சேர்க்கை சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களால் அனுபவம் அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
அஸ்வினி : எண்ணங்கள் மேம்படும்.
பரணி : நம்பிக்கை உண்டாகும்.
கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அனுபவங்கள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மறைமுகமாக சில இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : இன்னல்கள் நீங்கும்.
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். நிலையான வருமானம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.
பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
ஆயில்யம் : ஆரோக்கியம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
உயரதிகாரிகள் மூலம் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உல்லாச பயணம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தன வரவு மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
மகம் : ஒத்துழைப்பான நாள்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். பேச்சுக்களில் விவேகமும், பொறுமையும் வேண்டும். பெரியோர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பரிசு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : பொறுமை வேண்டும்.
சித்திரை : மாற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சகோதரர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில்நுட்ப கருவிகளால் சில விரயங்கள் உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
சித்திரை : நெருக்கடிகள் குறையும்.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : அனுபவங்கள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
தடைகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பேச்சு வன்மையால் காரிய சித்தி ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் புரிதலும் மேம்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
விசாகம் : பாராட்டுக்கள் கிடைக்கும்.
அனுஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
கேட்டை : புரிதல் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
கலை பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வெளியூர் பயணத்தில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெண்மை நிறம்.
மூலம் : ஆதாயம் உண்டாகும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : தாமதங்கள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புது விதமான எண்ணங்களும் ஆசைகளும் உருவாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழல்கள் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வாழ்க்கை துணை வழியிலிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
உத்திராடம் : எண்ணங்கள் கைகூடும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : வேறுபாடுகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் மேம்படும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
அவிட்டம் : ஆதாயகரமான நாள்.
சதயம் : வசதிகள் மேம்படும்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : தன்னம்பிக்கை பிறக்கும்.
*┈┉┅━•• ••━┅┉┈*