பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்டவர்கள் காரைநகருக்கு மாற்றம்! 14 நாட்களின் பின்பே சட்ட நடவடிக்கை, பெயர் விபரம் இணைப்பு.. |

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது இரு ரோலர் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் 23 பேரும் காங்கேசன்துறையிலிருந்து காரைநகர் கடற்படை தளத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். 

அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் இரண்டும் மயிலிட்டி துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப் படவுள்ளதுடன்  14 நாட்களின் பின்னர் பி அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

கைதான மீனவர்கள் விபரம் வருமாறு,

IND TN06 MM 8116 இலக்கமுடைய படகிலிருந்து கைதானோர்) அக்கரைப் பேட்டை, ஆரியனாறு வீதி, பெருமாள் பேட்டை, சத்ரபாடி, புதுப்பேட்டை பகுதிகளை சேர்ந்த, 

அகத்தியன் (வயது 40), சிவராஜ் (வயது 45), சிவசக்தி (வயது 32), சம்பத் (வயது 40), காந்தன் (வயது 40, முருகன் (வயது 35), ஆறுமுகம் (வயது 50), வினித் (வயது 25), விஜேந்திரன் (வயது 30), வீரகுமார் (வயது 30), சுதாகர் (வயது 32)

IN TN 06 MM 5112 இலக்க படகிலிருந்து கைதானோர்) அக்கரைப்பேட்டை, பெருமாள் பேட்டை, சமந்தான் பேட்டை பகுதிகைளச் சேர்ந்த, 

சிவநேசன் (வயது 40), குட்டியாண்டி (வயது 48), வீரசேகரன் (வயது 40), செல்வம் (வயது 38), இளங்கோவன் (வயது 48), ஆனந் (வயது 30), உத்ரபதி (வயது 33),

தமிழ்வாணன் (வயது 40), ரவி (வயது 44), சாமிநாதன் (வயது 25), எழிலரசன் (வயது 38), வெங்கதீஸ் (வயது 45),ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர்.

Recommended For You

About the Author: Editor Elukainews