பொற்பதி மக்கள் நலன்புரிச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா….

பொற்பதி மக்கள் நலன்புரிச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மக்கள் நலன்புரி சங்கத்தின் தலமையகத்தில் அதன் தலைவரான அ. அசோக்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மங்கள விளக்குகளை பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ் தியாகலிங்கம், ஆ.சுரேஷ்குமார் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு வேந்தன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் உ.நிதர்சன், பொற்பதி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியை திருமதி தவராசா, உட்பட பலரும் ஏற்றி வைத்தனர், அதனைத் தொடர்ந்து தலைமை உரையை அதன் தலைவர் அ. அசோக்குமார் நிகழ்த்தியதை தொடர்ந்து சிறப்பு உரையினை பருத்தித்துறை பிரதேசசபையின் உறுப்பினர் ஆ.சுரேஷ்குமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் திரு வேந்தன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் உ.நிதர்சன். ஆகியோர் நிகழ்த்தினர் இதனைத்தொடர்ந்து
யா/பொற்பதி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய 2 மாணவர்களுக்கும்,அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியை திருமதி தவராசா ஆகியோருக்கும் பதக்கம் மற்றும் பணப் பரிசுகள் என்பன வழங்கப்பட்டதுடன் பொற்பதி கிராமத்திலருந்து கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியெய்திய 8 மாணவர்களுக்கும் பண பரிசில்கள், மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்,

மிகவும் வறிய நிலையிலிருந்த தெரிவுசெய்யப்பட்ட மூவருக்கு கடற்தொழில் செய்வதற்காகப் வலைகளும் வழங்கப்பபட்டன. இதே வேளை பொற்பதி கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூபா 2500 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்குவதன் முதற்கட்டமாக இன்றைய தினம் 2500 ரூபா வீதம் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலன்புரி சங்கம் பொற்பதி மூன்று ஆண்டுகளாக இதுவரை பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கல்விக்கான உதவிகள் என்பன மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
இதில் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆ.சுரேஸ்குமார், எஸ்.தியாகலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி ச.திரவியராசா, இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் உ.நிதர்சன்,பொற்பதி மக்கள் நலன்புரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்,பயனாளிகள், மாணவர்கள் என பலரும் சுகாதார நடைமுறை பின்பற்றி கலந்து கொண்டமை குறிப்பிட தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews