இராணுவம் வடமராட்சியில் உதவி.

இலங்கை இராணுவத்தினரின் 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  வடமராட்சி எள்ளங்குளம் 4ம் இலங்கை சிங்க படைப்பிரிவினால் சிறுவர்கள், முதியவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி ஸ்ரீ பரமானந்த சிறுவர் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.
இதில்  சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கான பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறுவர்கள் முதியவர்களின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்த்தன, Rsp vsp Ndu, 551 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் Dca விக்கிரமசிங்க, USP USA,
4ம் இலங்கை சிங்க ரெஜிமன்ட் 2ம் கட்டளைத் தளபதி மேஜர் பண்டார,  Rsp , ஸ்ரீ பரமானந்த சிறுவர் முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.சிவசுவாமி, பொது சுகாதார பரிசோதகர், மற்றும்  அதிதிகள்  கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews