ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!

ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் அவர்களின் வீட்டிற்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் நேற்று முன்தினம் 13/06/2024  அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இது கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தைரியமற்ற கோழைகளின் அற்பத்தனமான சட்டவிரோத செயற்பாடாகும்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்வதற்கு பொலிசார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதோடு, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews