அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர  நடவடிக்கை –   உறவினரிடம் அமைச்சர் டக்ளஸ்..!

காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அனலைதீவு கடற்பரப்பில் இருந்து  கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் கடற் கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இருவரும் கரை திரும்பாத காரணத்தினால் பதற்றம் ஏற்பட்டிருந்ததுடன்,  அனலைதீவு கடற்பரப்பெங்கும் கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களால் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தேடப்பட்டுவந்த  இருவரும் தமிழக கடற்பரப்பில் கரையொதுங்கிய தகவல் கிடைக்கப்பெற்றது.
இந்நிலையில் குறித்த இருவரது குடுப்பத்தினர்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து  இருவரையும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கடற்றொழில் அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews