4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையின் சாராம்சம்…!

கௌரவ சபாநாயகர் அவர்களே ! கடந்த 2023 டிசெம்பர்  04 ம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் நீதியமைச்சு தொடர்பான குழுநிலை விவாததத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றிய விடயங்கள் தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ பாராளுமன்றில் அறிக்கையிட்டிருந்தார். அவரது பேச்சில் குறிப்பாக என்னை ஒரு இனவாதியாகவும்,... Read more »

வாங்காதே வாங்காதே சாராயம் வாங்காதே – அலெக்ஸிற்கு நீதி வேண்டி கண்டனப் போராட்டம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்றையதினம் வட்டுக்கோட்டை சந்தியில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “காவல்துறையா காவாலி துறையா, சுடலையில் வைத்து தாக்காதே, அலெக்ஸ் ஒரு அப்பாவி வட்டுக்கோட்டை பொலிஸ் குற்றவாளி, அலெக்ஸிற்கு... Read more »

அமரர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களுக்கு “தேசப்பற்றாளர்” என்ற கௌரவம் வழங்கி வைப்பு!

அமரர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களின் தமிழ்த் தேசிய கொள்கை சார்ந்த அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவருக்கு “தேசப்பற்றாளர்” என்ற உயரிய கௌரவத்தை வழங்கி மதிப்பளிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. முன்னணி வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே... Read more »

மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல்! மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது . இந்த நிகழ்வானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர்... Read more »

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களது 16ம் ஆண்டு நினைவேந்தல் 02/11/2023  மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.... Read more »

ஹர்த்தால் நாளில் நான்கு பேர் 2500 ரூபாவிற்காக பாராளுமன்றம் வந்தார்கள் – அங்கயன் எம்.பி சாடல்.

வடக்கு கிழக்கு ஹர்த்தாலை அறிவித்த தமிழ் தலைவர்கள் நான்கு பேர் ஹர்தாலுக்கு செல்லாமல் 2ஆயிரத்து 500 ரூபாவுக்காக பாராளுமன்றம் வந்தார்கள் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

பாடசாலை நடவடிக்கைகளை புறக்கணியுங்கள் – பெற்றோர்கள் மாணவர்களிடம் தமிழ் கட்சிகள் வேண்டுகோள்!

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று வெள்ளிக்கிழமை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில்,நாளை நிகழவுள்ள பொது முடக்கம் முழுமையாக வெற்றியீட்டுவதை... Read more »

இந்திய – இலங்கை அரசின் திட்டத்திற்குள் சிக்கி பலிக்கடா ஆக வேண்டாம் – இசையமைப்பாளர் சந்தோஷிடம் முன்னணி கோரிக்கை

எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில், தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியானது நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இசை நிகழ்ச்சியை அந்த நாட்களில் நடாத்த வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர். இன்றையதினம் அவர்கள் வெளியிட்ட... Read more »

மயிலத்தமடு போராட்டப் பகுதியில் பறக்கும் ஹெலிகாப்டர் – அப் பகுதியில் பதற்றம்!

மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் அப்பகுதியில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை... Read more »

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்தவாரம் ஹர்த்தால்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்தவாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுஎன்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் இன்றைய தினம் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »