ஓமடியா மடு கிராம மக்களுக்கு உலகத் தமிழர் தேசிய பேரவையால் உதவி….!

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலர் பிரிவிலுள்ள ஓமடியமடு கிராமத்தில் தற்போதைய கொரோணா நிலமை காரணமாக பாதிக்கப்பட்ட 190 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை உலகத் தமிழர் தேசிய பேரவையினரால் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் திருகோணமலை தென்கயிலை ஆதீன குரு முதல்வர் வணக்கத்திற்க்குரிய அகத்தி அடிகளார், அவரது சீடர் வணக்கத்திற்க்குரிய தம்பிரான் அடிகளார், அதன் செயற்பாட்டாளர்களான இ.முரளீதரன், ஜெ.சற்குணதேவி, உட்பட்ட உலகத் தமிழர் தேசிய பேரவை உறுப்பினர்கள், மட்டக்களப்பு சமூக செயற்பாட்டாளர்களான முரளி, க.சேகர் உட்பட பலரும் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர. குறித்த ஓமடியா மடு கிராமம் குடிநீர் பிரச்சினை தொழில் இன்மை, மற்றும் வீதி அபிவிருத்தி போன்றவற்றில் பின்தங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews