மின் இணைப்புகள் தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு!

மின் இணைப்புகளை வழங்குவதில் இலங்கை மின்சார சபையினால் நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் வைப்புத்தொகைக்கான வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் உயர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று முர்து பெர்னாண்டோ, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அதன்படி மின்சார பாவனையாளர்கள் செலுத்தும் வைப்புத் தொகைக்கு இவ்வருடத்திலிருந்து 11.67 வீத வருடாந்த வட்டியை செலுத்துவதாக இலங்கை மின்சார சபை முன்னர் நீதிமன்றில் உறுதிமொழி வழங்கியிருந்தது.

ஆனால் இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவிந்தநாத் தாபரே அது தொடர்பில் திருப்தியடைய முடியாது எனவும், நுகர்வோர் உரிய தொகையை வைப்பிலிட்டதிலிருந்து வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினார்.

அதன் பின்னர் மேலதிக தகவல்களை பரிசீலிக்க ஏப்ரல் 02 ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews