உணவு ஒவ்வாமையால் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

நமுனுகுல – கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உணவு விசமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் இன்று காலை திடீரென சுகவீனமடைந்த நிலையில், பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு முதல் ஐந்தாம் தரங்களுக்கு இடைப்பட்ட வகுப்புகளில் கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 மாணவிகளும் 6 மாணவர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews