நாடாளுமன்றத்தை கலைக்க இரகசிய திட்டம்..!

நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணையின் ஊடாக நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக்கலந்துரையாடலில் தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் இரு கட்சிகளின் சிரேஷ்டர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக தெரியவருகிறது.

அதில் ஆர்வமுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு கணக்கிடுவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இரு கட்சிகளின் சிரேஷ்டர்களின் கலந்துரையாடலில் எழுந்துள்ள விடயங்களை கட்சி தலைவர்களிடம் முன்வைத்து இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரகசிய கலந்துரையாடலுக்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews