சேவா லங்கா மன்றத்தால் உதவிகள்….!

கொரோனாவினால் பயணக் கட்டுப்பாடு காரணமாக வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு சசாகாவா வழிகாட்டலில் ஜப்பான் நாட்டின் நிப்போன் பவுண்டேஷனின் நிதியளிப்பில் சேவா லங்கா மன்றத்தின் வழிகாட்டலில் உலர் உணவுபொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, அனுராதபுரம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய ஒன்பது மாவட்டங்களில்  தெரிவு செய்யப்பட்ட 1800 வறிய குடும்பங்களுக்கே இவ்வாறு உலர் உணவுபொதிகள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள குடும்பங்களும்,  பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுமாக தெரிவு செய்யப்பட்ட 215 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு புணாணை கிழக்கு கிராம சேவகர்பிரிவில் ஆலங்குளம் கிராமத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் ஏ.சுதாகரன், சேவா லங்கா தலைமை காரியாலய பணிப்பாளர் யுட்னிடயஸ், சேவா லங்கா நிறுவனத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஜி.நாகராஜன், சேவாலங்கா நிறுவனத்தின் தலைமை காரியாலய அதிகாரிகள், புணாணை கிழக்கு கிராமஉத்தியோகத்தர் எஸ்.தேவேந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews