லொஹான் ரத்வத்தைக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ –

லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பாமங்கட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கைகள் வெளியாகுவதற்கு முன்பாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பது பாரிய தவறாகும்.

எனினும் லொஹான் ரத்வத்த, தன்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், தனது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தது சிறந்த தீர்மானமாகும்.

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் என்ற முறையில், சிறைச்சாலைகளுக்கு சென்று தூக்குமேடையை பார்க்கும் உரிமை அவருக்கு உள்ளது.

தவறு ஒன்று நேர்ந்துவிட்டால் ஏனைய நாடுகளில் தமது பதவியை இராஜினாமா செய்வார்கள்.

இங்கு அவ்வாறு பதவிகளை இராஜினாமா செய்ய மாட்டார்கள் என கூறியவர்கள் தற்போது லொஹான் ரத்வத்த பதவியை இராஜினாமா செய்த பின்பு அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews