யாழ்ப்பாண சிறைச்சாலையில் கைதிக்கு தொலைபேசி கொடுத்த சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2023.08.13 ம் திகதி அன்று உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும் போது கைதியான கமல் பிரியதர்ஷன என்பவரிடம்கைத் தொலைபேசியினை வழங்கியுள்ளார் .

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கைதி களுத்துறை சிறைச்சாலையில் நன்னடத்தை இல்லாத காரணத்தினால் நன்னடத்தைக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர். 1g 04mg ஹெரோயின் வழக்கில் 14வருட தண்டனை கைதியாவர்.

சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு சிறைச்சாலை அத்தியட்சகர் கே. வி. எ உதயகுமார அவர்களின் வழிகாட்டலில் 2023.08.15 சிறைச்சாலையில் நடைபெற்ற சோதனையில் தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டது.

பின்பு நடைபெற்ற விசாரணையின் போது டி. கே எதிரிசிங்க என்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் தான் தொலைபேசி கொடுத்தார் என கண்டுபிடிக்கப்பட்டுசிறைச்சாலை உத்தியோகத்தர்களான P.N விமலரத்தன, D. N ஜெயவர்த்தன, S. I குணசேகர, T. சதுஷன் ஆகியஉத்தியோகத்தர்களால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ப்படவுள்ளார்,

Recommended For You

About the Author: Editor Elukainews