யாழில் யூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடாத்த தடை!அரச அதிபர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் ஆ,சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.

எதிர்வரும்யூலை மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரையான  மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை இடைநிறுத்தல் தொடர்பில் இன்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் கல்வியிலாளர்கள் சமூக ஆர்வலர்களின் பங்கு பற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில்மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்,

Recommended For You

About the Author: Editor Elukainews