இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது பிரேசில்

பிரேசிலிய கூட்டுறவு முகவரகம் (ABC) மூலம் பிரேசில் அரசாங்கம், ஒருதொகை மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.இதில் 10,000 இன்சுலின் குப்பிகள் மற்றும் 8 மில்லியன் பொலிப்ரொப்பிலீன் டிப்ஸ் (சேலைன் ஊசிகள்) என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளனகொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று இலங்கைக்கான பிரேசில் தூதுவர் செர்ஜியோ லூயிஸ் கேனஸிடம் இருந்து வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்த மருத்துவப் பொருட்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டார்.இதன்போது, இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை எடுத்துரைத்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர், பிரேசில் அரசாங்கத்தின் இந்த நல்லெண்ணச் செயலுக்குப் பாராட்டு தெரிவித்தார்.இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஓ.எல். அமீர் அஜ்வத் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த நன்கொடை பிரேசிலில் உள்ள இலங்கை தூதரகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews