லங்கா ஐஓசியும் எரிபொருட்களின் விலையை குறைத்தது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்றிரவு அறிவித்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 330 ரூபாவாகும்.
ஒரு லீற்றர் டீசல் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 310 ரூபாவாகும்.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விலை 333 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 365 ரூபாவாகும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews