யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று, நல்லுார், சண்டிலிப்பாய், உடுவில் பகுதிகளில் அதிக தொற்றாளர்கள்.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகம் மற்றும் சுகாதார பிரிவு வெளியிடும் தினசரி நிலவர அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது. 

இதன்படி மாவட்டத்தில் அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில் வேலணையில் 9 பேருக்கும், ஊர்காவற்றுறையில் 10 பேருக்கும்,

யாழ்ப்பாணத்தில் 2 பேருக்கும், நல்லுாரில் 33 பேருக்கும், சண்டிலிப்பாயில் 68 பேருக்கும், உடுவிலில் 35 பேருக்கும், தெல்லிப்பழையில் ஒருவருக்கும், கோப்பாயில் 17 பேருக்கும், பருத்தித்துறையில் 32 பேருக்கும்,

மருதங்கேணியில் ஒருவருக்கும், யாழ்.சிறைச்சாலையில் ஒருவருக்கும், யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒருவருக்கும், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒருவருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews